இஸ்லாம் என்ற கோட்பாடும் அதன் நடைமுறைப் பிரயோகமும்

சென்ற முறை சிறுபான்மை சமூகமாக பெரும்பான்மையினுள்ளே வாழும் நிலையில் அச் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கான கோட்பாட்டொழுங்கு பற்றிய பிரச்சிணையை நோக்கினோம். பிரச்சினைகளை மட்டும் எழுப்பி தீர்வுகள் சொல்லாது விடுதல் சரியான …

மாற்றம் என்ன, எவ்வாறு?

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் பாதை விரைவானதாக அமைய முடியும். மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்ட அரசியல் வேலைத் திட்டமொன்று இருந்தால் மட்டுமே இதனைச் சாதித்துவிடலாம். இதன் பொருள் …

நாம் செய்ய வேண்டியது என்ன?

நாம் இலங்கையின் முஸ்லிம் சமூகம். மிகுந்த சிக்கல்களோடு வாழ்கிறோம். பெரும்பான்மை சமூகத்தோடு எவ்வாறு உறவாடுவது என்பதில் எம்மிடையே இன்னும் மிகச் சரியான தெளிவான முடிவுகளுக்கு வர முடியாத நிலையே உள்ளது. …

 அடுத்த சமூகங்களோடு உறவாடல் – ஒரு கோட்பாட்டு விளக்கம்

இனக் கலவரங்களை அடிக்கடி சந்தித்து வரும் இலங்கை முஸ்லிம்  சமூகத்தினுள்ளே முஸ்லிம் அல்லாதவர்களோடு உருவாகும் முரண்பாடுகளையும், வன்முறைசார் நடவடிக்கைகளையும் தவிர்த்துக் கொள்வது எவ்வாறு

நிரந்தரத் தீர்வை நோக்கி…

இவ்வாறு கலக்கத்துடனும், பதட்டத்துடனும் தொடர்ந்து வாழ முடியாது. உடனடித் தீர்வுகளுடன் நாம் நின்று விடவும் கூடாது. நிரந்தரத் தீர்வு நோக்கி நாம் நகர வேண்டும்.

இனக் கலவரங்களும் முஸ்லிம் சமூகப் பாதுகாப்பும்

சில மாதங்களுக்கு முன்னால் ஜின்தோட்டை, இரண்டொரு கிழமைகளுக்கு முன்னால் அம்பாறை தற்போது திகன என முஸ்லிம் – சிங்கள இனக் கலவரங்கள் தொடர்கின்றன.

இலங்கை அரசியலும் தேர்தல் தந்த செய்தியும்

சிறீ லங்காவின் பிரச்சினை இதுதான். சுதந்திரத்திற்குப் பின்னான அதன் வரலாற்றில் அனைத்து சமூகங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைமை தோன்றவே இல்லை. அந்தப் பின்னணியில் இன முரண்பாடும் அதனால் உருவாகும் சிக்கல்களும், கைகலப்புகளும், இனக் கலவரங்களும் இந்த நாட்டின் சாபக் கேடாகிப் போய்விட்டது.

இஸ்லாமிய வேலைத் திட்டம் – ஒரு கருத்து

இஸ்லாமியப் பணி என்பது: கீழ் வருவனவாகும்:

ஆன்மீக ரீதியாக முஸ்லிம்களைப் பக்குவப் படுத்தி நல்லொழுக்கம் உள்ளவர்களாக அவர்களை மாற்றல். குடும்பம், கல்வி, பொருளாதாரம், அரசியல் போன்ற சமூக வாழ்வின் பல்வேறு பகுதிகளுக்கான ஷரீஆவின் இலக்குகளைக் கண்டு அவற்றை நடைமுறைக்குக் கொண்ட வரல். அடுத்த சமூகங்களுக்கு இஸ்லாத்தை எத்திவைத்தல் என்ற கடமையின் பிரதான அடிப்படையான முன்மதிரி சமூகமாக இருத்தல்.

முஸ்லிம் அரசியல் நிலை

முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியிலான இன்றைய உள்ளூராட்சித் தேர்தலை அவதானிக்கும் போது எந்தத் தேசிய தலைமையும் இன்றி பல்வேறு கட்சிகளின் உள்ளே முஸ்லிம் சமூகம் மிக மோசமாகச் சிதறிப் போய் நிற்பது கவனத்தில் கொள்ளத்தக்க விடயமாகும்.

இஸ்லாமிய அரசியல்…?

முஸ்லிம்களின் சமூக வாழ்வில் இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று அவர்களது ஆன்மாவைப் பலப் படுத்தி இறைபயமும், உயர்ந்த ஒழுக்கமும் கொண்டவர்களாக அவர்களை ஆக்கும் பணி. இப் பகுதியைக் கட்டியெழுப்பும் வகையிலேயே பள்ளி, அல் குர்ஆன் மத்ரஸா, அஹதிய்யா, மார்க்கக் கல்வி நிறுவனங்கள், பாடசாலைகளில் இஸ்லாம், அரபுப் பாடத் திட்டம் என்பன காணப்படுகின்றன.
இரண்டாவது பகுதி முஸ்லிம் சமூகத்தின் பௌதீக வாழ்வாகும். கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், ஒரு கிராமத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் என்பன இவற்றில் அடங்கும். இப் பகுதி மனிதனின் வாழ்வுக்கான அடிப்படைத் தேவைகளாகும்.