சுகாதாரப் பகுதி – சமூக இயக்கம்

முஸ்லிம் சமூகத்தின் அடுத்த இயக்கம் சுகாதாரப் பகுதி சார்ந்ததாகும். மனிதனின் உடலும், உள்ளமும் அந்தப் பகுதியின் இரு அடிப்படை அம்சங்களாகும். உடல், பௌதீக சுகாதாரம், மருத்துவம் சார்ந்தது. உள்ளம், மனோதத்துவவியல் சார்ந்தது.

பொருளாதாரம், அரசியல் துறை சார்ந்த எமது இயக்கம்

இம்முறை இன்னொரு பகுதியைப் பார்ப்போம். அது பொருளாதாரப் பகுதியும், அரசியல் பகுதியுமாகும். முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தின் வாழ்வியக்கம் குறித்து தொடராகப் பார்த்து வருகிறோம்.

சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் சமூக இயக்கம்

வணக்க வழிபாடுகளின் பின்னர் சமூக விவகாரங்கள் சார்ந்த இயக்கமொன்று முஸ்லிம் சமூகத்திற்குள்ளது. அப் பகுதிக்கான வழிகாட்டலும் மிகவும் அடிப்படையானது. இப் பகுதி பற்றியே இங்கு நோக்குகிறோம்.

சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் இயக்கம்

ஒரு முஸ்லிம் சமூகத்தின் அடிப்படையான இயக்கம் – அது சிறுபான்மையாயினும், பெரும்பான்மையாயினும் – நம்பிக்கையும், வணக்க வழிபாடுகளுமாகும். நம்பிக்கை பகுதி அடிப்படையில் அறிவு சார்ந்தது. எனவே பாடசாலைகள் ஊடாக இதனை உயிரோட்டமாக எவ்வாறு கொடுக்கலாம் என ஒரு முஸ்லிம் சமூகம் சிந்திக்க வேண்டும்.

இஸ்லாத்தைக் கற்கும் வழி பற்றி ஒரு மீள் பரிசீலனை?

இலங்கை முஸ்லிம்கள் எவ்வாறு இஸ்லாத்தைக் கற்கிறார்கள்? அவர்கள் அனைவரும் ஒரு முறையான கல்வி ஒழுங்கின் ஊடே இஸ்லாத்தைக் கற்றுக் கொள்கிறார்களா?

எமது சமூக யதார்த்தத்தை நோக்கி…

இஸ்லாமிய உலகின் பல்வேறு பகுதிகளில் தோன்றிய இயக்கங்கள், இஸ்லாமிய சமூகத்தின் மீதெழுந்த அபாயகரமான சவால்களால் தாக்கமுற்று எழுந்தன. அவ்வபாயகரமான சவால்கள் 20ம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் அவற்றின் உச்ச நிலையை அடைந்திருந்தன.

எமது வாழ்நிலையும் சட்டத்தீர்வுகளும் (பத்வாக்களும்)

நம்பிக்கைகள் உள்ளத்தோடும், சிந்தனையோடும் சம்பந்தப்படுபவை. அந்த வகையிற்றான் மனிதனை அவை இயக்கும். ஆனால் சமூக வாழ்வில் அவன் இயங்கும் ஒழுங்கை விளக்குவது சட்டமாகும்.

உசைர் ஆசிரியர் – ஒரு பன்முகப்பட்ட ஆளுமை

உசைர் ஆசிரியர் 18-09-2017 திங்கட் கிழமை இரவு இறையடி சேர்ந்தார். அவர் எனது தாயின் சகோதரியின் மகன் – எனது நாநா. எனக்கு சொந்த நாநா இல்லை. நானே வீட்டின் மூத்த பிள்ளை. அந்த நாநா இல்லாத குறையைப் பூர்த்தி செய்தவர் அவர்.

ரோஹிங்கியா முஸ்லிம்கள்

மியன்மார் ரோஹிங்கியா சிறுபான்மை முஸ்லிம்கள் நீண்ட காலமாகவே கொடுமைகளுக்கு உட்பட்டுவருவோராவர். அததிகமான வரலாற்றாசிரியர்களது கருத்துப்படி 12ம் நூற்றாண்டிலிருந்து அவர்கள் அங்கு வாழ்கிறார்கள்.

இஸ்லாம் நடைமுறையாதல் – ஒரு சிந்தனை

இஸ்லாம் நான்கு பகுதிகளைக் கொண்டது. நம்பிக்கை, வணக்க வழிபாடுகள், ஒழுக்கம், சட்டம் என்பவையே அவையாகும். ஷரீஆவை நடைமுறைப் படுத்துகிறோம் என்னும் போது இந்த நான்கு பகுதியுமே அடங்கும்.