நாம் செய்ய வேண்டியது என்ன?

நாம் இலங்கையின் முஸ்லிம் சமூகம். மிகுந்த சிக்கல்களோடு வாழ்கிறோம். பெரும்பான்மை சமூகத்தோடு எவ்வாறு உறவாடுவது என்பதில் எம்மிடையே இன்னும் மிகச் சரியான தெளிவான முடிவுகளுக்கு வர முடியாத நிலையே உள்ளது. இது பற்றி அடிப்படையில் எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்பது பற்றிய சில குறிப்புகளைக் கீழே தருகிறோம்.

(1) சில குறிப்பிட்ட விடயங்களை அவை ஸுன்னத்தாகவோ, வாஜிபாகவோ இல்லாத போதும் அவற்றைப் பிடிவாதமாக பற்றிப் பிடித்துக் கொண்டு அவற்றிற்காக வாதாடி, சிலவேளை போராடி வாழ முயல்கிறோம். இது இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் ஒரு சரியான முடிவாக இருக்க முடியாது.

(2) கருத்து வேறுபாடான ஒரு இஸ்லாமிய சட்டத்தில் ஒரு குறிப்பிட்ட கருத்தை மாத்திரம் பின்பற்றி அதனை விட்டுக் கொடுக்காது அல்லது நெகிழ்ந்து கொடுக்காது பற்றிப் பிடித்து நிற்க முயல்கிறோம். சட்டத்தின் அடுத்த கருத்தே எமது நாடு, சூழல், என்பவற்றிற்குப் பொருத்தமாக இருந்தாலும் அதனை ஏற்க நாம் தயாரில்லை.

(3) நாம் தஃவா நலன் குறித்து சிந்திக்கிறோமில்லை. அடுத்த சமூகங்களுக்கு வெறுப்பூட்டும் சில செயற்பாடுகளை அவை ஸூன்னா என்று பின்பற்றுகிறோம். ஆனால் அந்த செயற்பாடு கருத்து வேறுபாட்டிற்குரிய சட்டமாக இஸ்லாமியப் பார்வையில் இருக்கும்.

இக் கருத்துக்களைச் சுருக்கி கீழ்வருமாறு தரலாம் :

 

செயற்பாடு ———— கருத்து வேறுபாடானது

||
||

சூழலுக்கும், நாட்டு நிலைக்கும் பொருத்தமானதைத் தெரிவு செய்தல்.

 தஃவா —————- பலப்படுத்தும் கருத்தைத் தெரிவு செய்தல்.

 

இப்போது நாம் உண்மையில் எதனையும் விட்டுக் கொடுக்கவோ அல்லது இஸ்லாத்திற்கு முரண்படவோ இல்லை.

புதிய சூழலுக்கேற்ப இஸ்லாமியக் கண்ணோட்டத்திலேயே எம்மை நாம் ஒழுங்குபடுத்திக் கொள்கிறோம்.

Reply