சமூகத்தளத்தின் உழைப்பாளர்கள் – ஓர் உதாரணம்

சென்ற திங்கள் கிழமை 04.01.2016 அன்று என்னோடு நெருக்கமாக தொடர்பு வைத்திருந்த இன்னொரு மனிதரும் இறையடி சேர்ந்தார். நாம் அல்லாஹ்வுக்காகவே உள்ளோம். அவனிடமே மீள்கிறோம் -இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்-

சகோதரர் நிசார் என்ற இஸ்லாமிய உழைப்பாளி

மரணம் அடுத்த உலகிற்குச் செல்லும் வாயில். அது உண்மையில் அழிவு அல்ல. உலகத்தில் சிறந்த முறையில் வாழ்பனுக்கு மரணம் பற்றிய பயம் இருக்க வேண்டியதில்லை. ஆனாலும் மரணபயம் மனிதனை விட்டு நீங்குவதில்லை. மரணத்தால் கவலையும், ஆழ்ந்த பரிதாப உணர்வும் மனிதனைப் பீடிக்கவே செய்கின்றன.

வாசிப்பற்றவன் மனிதனா? பகுதி 2

வாசிப்பு கல்விக்காக வெறும் பொழுது போக்குக்காக அல்ல என்ற அவதானம் மிக முக்கியமானது. இந் நிலையில்தான் அது அறிவு தேடலுக்கான அனைத்துப் பண்புகளையும் பெறும்.