சுதந்திரம் எமக்கு தரும் உணர்வு

சுதந்திரமே மனிதனை மனிதனாக காட்டுகிறது. சுதந்திரம் என்ற மனிதனின் தனித்துவப் பண்பு இல்லாதபோது மனிதன் மிருகத்திற்கு ஒப்பாகவே வாழ்வான். அத்தகைய மனிதன் வளர மாட்டான் உயர்வு பெறவும் மாட்டான். இது தனிமனிதனுக்கு மட்டுமன்றி நாடுகளுக்கும் பொருந்தும். சுதந்திரமற்ற நாடு தனது சுய தன்மையை இழந்து உருக்குலைந்து போகும். ஏனெனில் ஒரு நாட்டின் சுதந்திரத்தைப் பறித்து அதன் மீது ஆதிக்கம் செலுத்தும் நாடு தனக்குத் தேவையான வகையிலேயே தான் அடிமைப் படுத்திய நாட்டின் கல்வி, பொருளாதார, கலாச்சார நிலைகள் அனைத்தையும் வடிவமைக்கும் அந்த நாட்டின் வளங்கள் அனைத்தையும் உறிஞ்சிக் குடிக்கும்.

எமது நாடு ஏறத்தாழ நாலரை நூற்றாண்டுகளின் பிறகு அந்நிய ஆதிக்கத்திலிருந்து, அடிமைத் தளைகளிலிருந்து விடுதலை பெற்றது. அந்தச் சுதந்திரத்தை பெற நாட்டின் எல்லா சமூகங்களும் பங்களிப்பு செய்தன.

இப்போது 74 ஆவது சுதந்திர தினத்தில் இருக்கிறோம். இந்நிலையில் பௌத்த, ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவ சமூகங்கள் அனைத்தும் சுமுகமான, ஒற்றுமைப்பட்ட, சமாதான வாழ்வைச் சாதிப்போம். எல்லோரும் இந்த நாட்டின் குழந்தைகளாவோம். ஒரு தோட்டத்தின் பல்வேறு நிறமும் மணமும் கொண்ட பூக்களை போல் இங்குள்ள மதங்களும், கலாச்சாரங்களும், மொழிகளும் நாட்டுக்கு அழகை கொடுப்பன நறுமணத்தை கொடுப்பன எனக் காண்போம். இந்த ஒற்றுமையின் அடிப்படையில் இந்த நாட்டை வளப்படுத்துவோம். செல்வம் கொழிக்கும் நாடாக்குவோம். உலகின் உன்னத முன்மாதிரி தேசமாக்குவோம்.

வாழ்க எமது தாய் நாடு ஸ்ரீலங்கா!வளர்க அதன் வளங்கள்!சமாதானமும் தேசிய ஒற்றுமையையும் கோலோச்சட்டும். இந்த அழகிய நாட்டில்!

உலகில் மிக அருமையாகவே இப்படி ஒரு வளமிக்க நாட்டை காண முடியும். எங்கும் பசுமை! எங்கும் நீர்வளம்! எங்கும் வளம் கொண்ட பூமி! எங்கு திரும்பினாலும் அழகும் எழிலும்! இது எமது உள்ளத்தில் எப்போதும் பசுமையாக இருக்குமாக!

නිදහස අපට ලබා දෙන හැඟීම

මිනිසා සැබෑ මිනිසකු බවට පත් කරන්නේ නිදහසයි. නිදහස යන මනුෂ්‍ය ලක්‍ෂණය ඔහු සතුව නොමැති විට මිනිසා තිරිසනා මෙන් ජීවත් වනු ඇත. එවැනි මිනිසකු සදාචාරාත්මක වන්නේ නැත. ප්‍රඥාවන්ත වන්නේ ද නැත. එය පුද්ගලයන්ට පමණක් නොව, රටවල් කෙරෙහි ද අදාළ වේ. ස්වාධීන නොවන වහල් රටක් ස්වකීය අනන්‍යතාවය අහිමි වී කඩා වැටෙනු ඇත. මක්නිසාද යත්, යම් රටක් ආක්‍රමණය කරන බලවතා විසින්, වහල්භාවයට ලක්වන එම රටෙහි අධ්‍යාපනික, ආර්ථික හා සංස්කෘතික තත්ත්වයන් හැඩගස්වන බැවිනි. එපමණක් නොව, එම රටේ සියලු සම්පත් සූරා කෑමට ද ඔවුන් නොපසුබට වනු ඇත.

ශත වර්ෂ හතර හමාරකට පමණ පසු විදේශීය ආධිපත්‍යයෙන් හා වහල්භාවයෙන් අපේ රට නිදහස් විය. ඒ නිදහස සාක්ෂාත් කර ගැනීමට මෙරටේ සියලුම ජන කොටස් දායක වී ඇත.

ඒ අර්ථයෙන් ගත් කල, අද අපි ශ්‍රී ලංකාවේ 74 වන අභිමානවත් නිදහස් දිනය සමරන්නෙමු. මෙම උත්කර්ෂවත් අවස්ථාවේදී, බෞද්ධ, හින්දු, මුස්ලිම්, ක්‍රිස්තියානි යන සියලුම ප්‍රජාවන් සාමකාමී සහ සමගියෙන් යුතු ජීවිතයක් අත්කර ගැනීම උදෙසා අදිටන් කර ගනිමු. අපි හැමෝම සියලු භේද දුරැරා මේ රටේ දරුවෝ වෙමු.

විවිධ වර්ණ හා සුවඳ වලින් යුතු ඵල වර්ග යම් උද්‍යානයකට අලංකාරය එක් කරන්නා සේම, මේ රටේ විවිධ ආගම්, සංස්කෘතීන් සහ භාෂා මේ රටට අලංකාරය සහ සුවඳ ලබා දෙන බව මනසින් පිළිගමු…

මේ සමගිය පදනම් කරගෙන මේ රට පාලනය කරමු…!!!පොහොසත් රටක් බවට පත් කරමු…!!!ලොව උතුම් ආදර්ශවත් දේශයක් බවට පත් කරමු…!!!උදාර වූ අපේ මාතෘභූමියට ජය වේවා…!!!එහි සියලු සම්පත් සංවර්ධනය වේවා…!!!මේ සුන්දර රටේ සාමය සහ ජාතික සමගිය රජ කරත්වා…!!!මෙවැනි දේශයක් දැකගැනීමට ලැබීම භාග්‍යයකි…

හැමතැනම හරිත වර්ණය ය… හැමතැනම ජලය ය… අස්සක් මුල්ලක් පාසා පොහොසත් ය.. හැමතැනම සුන්දර ය… මෙය සැමදා අප සිත් තුළ පවතී වී…

Reply