அல் குர்ஆன் – கற்றலும், ஆராய்தலும்.

 

அல் குர்ஆனின் கருத்துக்கள் :

1. பிரபஞ்சம், மனித வாழ்வு என்பவற்றின் பொருளை விளக்குகிறது.

இதனைத் தர்க்க ரீதியாக, விஞ்ஞான பூர்வமாகத் தருகிறது. அத்தோடு உளரீதியாகத் தாக்கத்தை விளைவிக்கும் வகையிலும் விளக்குகிறது. அல்லாஹ், மறுமை வாழ்வு, வாழ்வு என்ற சோதனை என்ற இப் பகுதியையே இங்கு குறிக்கிறோம்.

மக்காவின் ஸூராக்கள் இப்பகுதியில் பெரும் கவனம் செலுத்தின.

2. பெறுமானங்கள், விழுமியங்கள்:

மனித வாழ்வின் அடிப்படைப் பெறுமானங்கள், விழுமியங்கள், ஒழுக்க வரம்புகள் என்பவற்றை அல் குர்ஆன் விளக்கியது. இப் பகுதியிலும் மக்காவின் ஸூராக்கள் கவனம் செலுத்தின. மதீனாவின் ஸுராக்களும் இவற்றை விளக்கின. நீதி, சுதந்திரம், மனித கண்ணியம், சமத்துவம், சமாதானம், மனித சகோதரத்துவம் போன்ற பெறுமானங்களோடு, நேர்மை, உண்மை, பொறுப்புணர்வு, வாக்குமீறாமை, பொறுமை, சகிப்புத் தன்மை, மன்னிப்பு மனப்பாங்கு, உதவுதல், தியாகம், அர்ப்பணம் போன்ற அடிப்படை ஒழுக்கப் பண்பாடுகளையும் அல் குர்ஆன் ஆழ்ந்து விளக்கியது.

3. கொள்கைகளும், கோட்பாடுகளும் அதாவது மேற்சொன்ன இரு பகுதிகளும் சட்டங்களாகவும், கட்டமைப்புகளாகவும் தனி மனித வாழ்வு, சமூகத்தின் பொருளாதார, அரசியல், குடும்ப வழ்வு போன்றவற்றின் மீது பிரயோகமாயின.

அல் குர்ஆனின் சமூக ரீதியான பிரயோகங்களை இப் பின்னணியிலிருந்து புரிந்து கொள்ள வேண்டும்.

அல் குர்ஆனின் வசனங்களுக்கான விளக்கம் – தப்ஸீர் – என்பது இந்தப் பின் புலத்தைக் கொண்டதாகும்.

எனவே பாரிய மாற்றங்களுக்குட்பட்ட இக் காலப்பிரிவில் அல் குர்ஆனுக்கான விளக்கத்தை இத்தகைய கோணத்திலிருந்து ஆராய நாம் பயில வேண்டும்.

Reply