முஸ்லிம்களும் பயங்கரவாதமும்.

பயங்கரவாதம், பயங்கரவாதிகள் என்ற பிரயோகங்கள் இக்காலப் பிரிவு உலகின் இயல்பு நிலையாக மாறிவிட்டது. உலகத்தின் தலைமை மேற்கு நாகரீகத்திடம் சென்றதிலிருந்து இது வலுத்துப் போய்விட்டது. ஹிட்லர், முசோலினி என்ற சர்வாதிகாரிகள், 1ம், 2ம் உலக மகா யுத்தங்கள் என்பவை எல்லாம் மேற்குலகின் உற்பத்திகள். உலக மாகா யுத்தம் எனக் கூறப் பட்டாலும் உண்மையில் அது ஐரோப்பிய அமெரிக்க யுத்தமே. தனது காலனித்துவ நாடுகளையும் மேற்குலகம் அந்த யுத்தத்தில் இழுத்து விட்டது.

ஐக்கிய நாடுகள் சபையும், மனித உரிமை சபைகளும் எனப் பல மனித சமாதானத்திற்கான சபைகள் இருந்த போதும் உலகில் சமாதானத்தைக் கொஞ்சமும் உருவாக்க முடியவில்லை என்பதே உண்மை.

அடிப்படையில் எங்கோ தவறிருக்கிறது என்பதுதான் இங்கு தெளிவாகத் தெரியும் உண்மை. அவற்றை எல்லாம் இங்கு நாம் விவரிக்க முற்படவில்லை.

ஆயினும் முஸ்லிம்களோடு ஒட்டி பயங்கரவாதம் என்ற பிரயோகம் பாவிக்கப்படுவதையே இங்கு நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

இங்கு நாம் இந்தக் கருத்தை நோக்குவோம்:

அனைத்து முஸ்லிம்களும் பயங்கரவாதிகளல்ல என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆனால் எல்லாப் பயங்கரவாதிகளும் முஸ்லிம்களா?!

கீழே வரும் அட்டவணைகளை அவதாணியுங்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்ட நடைமுறைக்குப் பொறுப்பான சபை யூரோபோல் எனப்படுகிறது. அவர்களது அறிக்கையின் படி 2006-2008 இடையிலான பயங்கரவாதச் செயல்கள்:

பிரிவினை வாதிகள்:   84.8%
ஏனையோர்:                    8.3%
இடது சாரியினர்:           6.5%
இஸ்லாமியவாதிகள்:  0.4%

barchart-copy-502x502-custom

2006ல் ஐரோப்பாவில் பயங்கரவாதத் தாக்குதல்கள்:

முஸ்லிம்கள்:                        01
பிரிவினைவாதிகள்:            424
இடது சாரியினர்:                  55
வலது சாரியினர்:                  01
வகைப்படுத்தப்படாதோர்: 17
மொத்தம்:                                 498

figure1

2007ல் ஐரோப்பாவில் தோல்வியடைந்த பயங்கரவாதத் தாக்குதல்கள்.

முஸ்லிம்கள்:                         04
பிரிவினைவாதிகள்:             532
இடது சாரியினர்:                   21
வலது சாரியினர்:                  01
தனி நபர் தாக்குதல்கள்:      01
வகைப்படுத்தப்படாதோர்: 24
மொத்தம்:                                583

figure2

2008 – ஐரோப்பாவில் தோல்வியுற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள்:

முஸ்லிம்கள்:                           0
பிரிவினைவாதிகள்:               397
இடது சாரியினர்:                     28
வலது சாரியினர்:                    0
தனி நபர் தாக்குதல்கள்:        05
வகைப்படுத்தப்படாதோர்:   11
மொத்தம்:                                   515

figure3

அமெரிக்க பெடரல் புலனாய்வு சபையின் (FBI) அறிக்கையின் படி:

1980 – 2005 வரை நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 94% முஸ்லிம் அல்லாதோர்.

கார்லீனா அமெரிக்க வடக்கு இராட்சியமொன்றின் 2014 ஆண்டு நடாத்திய ஆய்வுப்படி:

செப்டெம்பர் 11 தாக்குதல் நிகழ்வின் பின்னர் முஸ்லிம்களோடு சம்பந்தப்பட்ட தாக்குதல்களில் இறந்த அமெரிக்கர்கள் 28 பேர். இதே காலப்பிரிவில் (செப்டெம்பர் 11 தாக்குதல் முதல் 2014 வரை) கொல்லப்பட்ட அமெரிக்கர்கள் 190 ஆயிரம் பேர்.

பயங்கர வாதம் என்பது கிறிஸ்தவம், யூதம், பௌத்தம், ஹிந்து போன்ற எல்லா சமூகங்களுக்கும் உரியது. ஆனால் முஸ்லிம்கள் மட்டுமே மிகப் பாரியளவு காட்சிப்படுத்தப் படுகிறார்கள்.

இதன் பின்னால் இருப்பது அரசியல் காரணிகள். உலகை ஆளும் பாதாள உலக செயற்திட்டங்கள்.

தகவல்கள்:
அல் முஜ்தமஃ – இதழ் 2080
(டெய்லி போஸ்ட் என்ற பத்திரிகையில் வந்த கட்டுரையின் மொழிபெயர்ப்பு)

Reply