இலக்கியம் என்ற போராட்ட சாதனம்

عن كعب من مالك انه قال : يا رسول الله ما تري فى الشعر قال: إن المؤمن يجاهد بسيفه ولسانه والذي نفسي بيده لكأنما لتنضحونهم بالنبل

(முஸ்னத் அஹ்மத்: 15 785, ஸஹீஹ் இப்னு ஹில்பான், ஸில்ஸிலத் அல் அஹாதீஸ் அல் – ஸஹீஹா- அல்பானி- 1631)

கஃபு இப்னு மாலிக் அறிவிக்கிறார்:

அவர் இறை தூதர் (ஸல்) அவர்களிடம் கவிதை பற்றி என்ன கருதுகிறீர்கள் எனக் கேட்டார்.

அதற்கு இறை தூதர் (ஸல்) அவர்கள்: “இறை நம்பிக்கையாளன் தன் வாளாலும், நாவாலும் போராடுகிறான். எனது ஆன்மா யாரின் கையில் இருக்கிறதுவோ அவன் மீது சத்தியமாக: நீங்கள் அவ்வாறு கவிதைபாடும் போது அது அவர்கள் மீது அம்புகளை எறிவது போன்று தாக்கம் விளைவிக்கிறது.”

அல்-குர்ஆன்: “நிராகரிப்பவர்களுக்கு நீர் பணிந்து போக வேண்டாம். அதன்மூலம் பெரியதொரு போராட்டத்தைக் கொண்டு செல்வீராக.” (ஸுரா புர்கான்:52) என்று கூறுகிறது. “அதன் மூலம்” என இங்கு கூறுவது அல்-குர்ஆன் மூலம் என்ற கருத்தைக் குறிக்கிறது. எனவே அல்-குர்ஆனை முன்னிலைப் படுத்தி-சிந்தனை ரீதியான போராட்டத்தைக் கொண்டு செல்லுமாறு அல்லாஹ் இங்கே சொல்கிறான்.

இறை தூதர் (ஸல்) இந்த ஹதீஸ் மூலம் அதன் ஒரு பகுதியான இலக்கியத்தின் மூலமாக போராடலின் முக்கியத்துவத்தைச் சொல்கிறார்கள். ஆயுத போராட்டத்தைப் போன்றே அதுவும் பாரிய தாக்கத்தை விளைவிக்கும் எனவும் இறை தூதர் (ஸல்) இங்கே விவரிக்கிறார்கள்.

நவீன காலப்பிரிவில் சிந்தனைப் போராட்டமே அதி உயர்ந்த முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது என்பது தெளிவு. அப்பகுதியில் இலக்கியத்திற்கு ஒரு பாரிய இடமுண்டு. கவிதையும், பாட்டும், சிறுகதையும், நாவலும் மனித உள்ளங்களில் ஏற்படுத்தும் தாக்கம் மிகப் பாரியது. இறை தூதர் (ஸல்) அவர்கள் இங்கே போராட்ட உத்திகளை விளக்குகிறார்கள். அவற்றைக் கால, இட நிலைகளுக்கேற்ப முதன்மை படுத்தல், பிற்படுத்தல் எமது ஆய்வுக் குட்பட்டதாகும்.

Reply