விக்கிரக ஆராதனையின் உண்மைப் பொருள்.

ஷுரூத் அந்நஹ்லத் - மாலிக் பின் நபி

ஷுரூத் அந்நஹ்லத் – மாலிக் பின் நபி

அல் குர்ஆன் இஸ்லாத்திற்கு முன்பிருந்த காலக்கட்டத்தை ஜாஹிலிய்யத் என்று அழைத்தது. அவர்களிடம் மிகத் தரம் உயர்ந்த கவிதைகள் இருந்தன. தனித்துவமான இலக்கிய செல்வமும் அவர்களிடமிருந்தது. ஆனால் அவை எதுவும் அல் குர்ஆன் இவ்வாறு அக்காலப் பிரிவை வர்ணிப்பதைவிட்டுத் தடுக்கவில்லை. ஏனெனில் அரபு அறிவுப் பாரம்பரியம் அப்போது கவர்ச்சிமிக்க வெளித் தோற்றத்தை மட்டுமே கொண்டிருந்தது. எந்த ஆக்க அம்சத்தையும் அது கொண்டிருக்கவில்லை. ஆழ்ந்த தத்துவம் எதையும் அது உள்ளடக்கி இருக்கவுமில்லை. இஸ்லாத்தின் பார்வையில் விக்கிரக ஆராதனை அறியாமை ஆயின் அறியாமையும் அதன் உண்மைக் கருத்தில் விக்கிரக ஆராதனையேயாகும். நாகரிகமற்ற பூர்வ குடிகள் எளிமையான விக்கிரக ஆராதனை சமூகங்களாக இருந்தமை வெறுமனே தற்செயல் வரலாற்றுக் கட்டமல்ல. அரபு சமூகம் அக்கட்டத்தைக் கடந்து சென்றமையும் ஆச்சரியத்திற்குரியதொரு விடயமல்ல. சிந்தனை மறைந்தால் சிலையொன்று தோன்றும் என்பது மனித வாழ்வின் இறை விதியாகும். இதன் நேர் எதிர்ப் புறமும் சிலவேளை சரியாகவே இருக்கும். அதாவது சிலை மறைந்தால் சிந்தனையொன்று தோன்றும்.

ஷுரூத் அந்நஹ்லத் -எழுச்சிக்கான ஷரத்துகள்-
சிந்தனையாளர்: மாலிக் பின் நபி

Reply