அமெரிக்க கூட்டு யுத்தத்தின் நஷ்டவாளிகள்.

Dr. Muhammad Mukhtar Ash-Shinqiti

Dr. Muhammad Mukhtar Ash-Shinqiti

ISISக்கு எதிரான அமெரிக்கக் கூட்டுப் போராட்டத்தால் பெரும் இழப்புக்குட்படுபவர்கள் மூன்று தரப்பினர்:

 1. மரணத்தை அதன் இடங்களில் தேடிச் செல்லும் முஸ்லிம் போராளி இளைஞர்கள். இளைஞர்கள் மாபெரும் சக்தி. அரசியல் சாணக்கியமும், நுணுக்கமும் இன்மையால் அந்தச் சக்தி நியைவே மிக மோசமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸலபி ஜிஹாத் இயக்கங்களில் தொடர்ந்து இருந்து வரும் பலவீனம் பற்றி விளக்கி வருகையில் அல் காயிதா அமைப்பு பற்றி அமெரிக்க ஆய்வு நிறுவனமொன்று அது “இலக்கு வைத்துத் தாக்குதலில் உள்ள தவறு” Targeting mistake என்று கூறியது. ISIS இந்த இலக்கு வைத்துத் தாக்குதலில் காணப்படும் தவறுக்கு இன்னொரு உதாரணம். அரசியல் நுணுக்கமின்றி ஜிஹாத் கொடியை தாங்கி இளைஞர்கள் எரியும் தளம் ISIS.

  ஸலபி ஜிஹாத் இயக்கங்களின் இறுதி அமைப்பு ISIS. வீர உணர்வோ, தியாக உணர்வுக்கோ அங்கு எந்தக் குறையுமில்லை. ஷரீஆ அறிவு நுணுக்கமோ, அரசியல் சாணக்கியமோ இன்மைதான் அங்குள்ள குறைபாடு.

 2. சிரிய குர்டிஷ் சமூகத்தினர்: அவர்களின் சில தலைமைகள் அமெரிக்கர்கள் குறித்து நல்லெண்ணம் கொண்டனர். இன்று நிகழ்பவற்றை அவர்கள் பிழையான வாசிப்புக்குட்படுத்தினர்.

  ISISக்கு எதிரான அமெரிக்கக் கூட்டோடு குர்டிஷின் சில அரசியல் சக்திகள் இணைந்து அரசியல் ரீதியாகப் பயன்பெற முனைதல் ஒழுக்க ரீதியான தவறும், பாரிய மூலோபாயத் தவறுமாகும். குர்டிஷ்கள் மீது அமெரிக்கா விரித்த வலையாகவும் இது அமைகிறது.

 3. அரபு எதிர்ப்புரட்சியாளர்கள் கூட்டு: துருக்கி அமெரிக்க நட்பை சம்பாதித்து வெற்றி பெற்றது. அமெரிக்க இராணுவக் குடையிலிருந்தும், மூலோபாயத் திட்ட ஒழுங்கிலிருந்தும் அது விலகிக் கொண்டது.

  ஈரான் அமெரிக்காவை எதிர்த்து வெற்றி பெற்றது. அதனுடன் சமாதான நிலைக்குச் சென்றது. எல்லோருக்கும் ஆகுமாகிப் போன அரபு உடம்பை பங்கு பிரித்துக் கொள்ளவும் அது சென்றுவிட்டது. ஆனால் எதிர்ப்புரட்சி அரபு நாடுகள் அமெரிக்கா தங்கியிருக்கத்தக்க பாரமுள்ள அதன் நண்பனுமல்ல. அமெரிக்கா பயப்படத்தக்க பாரமுள்ள அதன் எதிரியுமல்ல.

  ஈரான் அமெரிக்காவுடன் லெபனானில் போராடியது. இராக்கில் அதனை வைத்து விளையாடியது. அப்கானிஸ்தானிலும், எமனிலும் அதனுடன் இலாபத்தில் பங்கு பிரித்துக் கொண்டது.

  அமெரிக்காவும் துருக்கியும் கம்யூனிஸ சக்திக்கு எதிராக 50 வருடங்கள் கூட்டுச் சேர்ந்தன. அந்தக் கூட்டு இரு தரப்பினருக்கும் பிரயோசனமளித்தது.

  ஆனால் எதிர்ப் புரட்சியின் அரபுத் தலைவர்கள் ஆச்சரியப்படத்தக்க அரசியல் மூலோபாயக் குருட்டுத்தனம் கொண்டவர்களாக உள்ளனர். இது அவர்களை “ஈமானோடு” அமெரிக்காவுக்குப் பணி செய்யமாறு ஆக்கிவிட்டது.

கலாநிதி முக்தார் முஹம்மத் அல்-ஷன்கீதீ

Reply