எமது அறிவுப் பாரம்பரியம் மிகப் பாரியது.

எமது அறிவுப் பாரம்பரியம் மிகப் பாரியது. நிலத்தால் அது மிக விரிந்தது.

ஹிராக் குகையில் வாசிப்பு, அறிவு, பேனா என்று துவங்கிய அந்த அறிவுப் பேரொளி மேற்கே ஐரோப்பா, கிழக்கே இந்தியா, தென்கிழக்காசிய நாடுகளெல்லாம் வீசிற்று.

எனவே ஐரோப்பாவில் அந்தலுஸ் (ஸ்பெயின்) பொஸ்னியா, வட ஆபிரிக்கா, மத்திய ஆபிரிக்க நாடுகளை உள்ளடக்கி, மத்தியாசியக் குடியரசுகளையும் தன்னுள் கொண்டு இந்தியா வரை விரிந்து தென்கிழக்காசிய நாடுகளையும் அது அடக்கியது.இப்பாரிய நிலப்பரப்பில் வாழ்ந்த பல மொழிகள், பல இனங்கள், பல கலாச்சாரங்கள் அந்த இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்திற்குப் பங்களிப்பு செய்தன.

இன்னொரு பக்கத்தால் காலத்தால் எமது அறிவுப் பாரம்பரியம் மிகப் பாரியது. ஸஹாபாக்கள் காலம் தொடங்கி நவீன காலம் வரை தொடரும் 13 நூற்றாண்டு ஆயுளை அது கொண்டது. எனவே எம்மைப் போல் மாபெரும் அறிவுப் பாரம்பரியத்தைக் கொண்ட சமூகங்கள் உலகில் கிடையாது.

இது பெருமைக்குறிய விடயம். எமது அறிவு வளத்தைக் காட்டும் விடயம். ஆனால் இந்த அறிவுப் பாரம்பரியத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றலும், திறமையும் எமக்கு இல்லாவிட்டால் அந்த அறிவுப் பாரம்பரியமே எதிர்காலத்தை நோக்கிய எமது முன்னேற்றத்தைத் தடுக்கும் இறந்த காலத்திலிருந்து வந்து விழுந்த பெரும் தடைக் கல்லாகவே இருந்துவிட முடியும்.

ஏன்?!

Reply