பலவீனம், எங்கே?!

 

Sri Lankan Muslims

இலங்கை முஸ்லிம்கள் சர்வதேச முஸ்லிம் உம்மாவின் ஒரு பிரிவினர்.

சனத் தொகையில் மூன்றாவது நிலை பெற்று வாழ்பவர்கள்.

நிலத் தொடர்பற்று சிதறிய கிராமங்களினுள்ளே மிகப் பெரும் பாலும் வாழ்பவர்கள்.

சனத் தொகையில் குறைவாக இருக்கின்றமை ஒரு குறைபாடா?

அந்நிலையில் தவிர்க்க முடியாத்தொரு பலவீன நிலையில்தான் வாழ வே
ண்டுமா?

நிலத் தொடர்பற்று சிதறி வாழல் இன்னொரு பலவீனமா?

இவை இரண்டும் தவிர்க்க முடியாது கிடைத்தவை, இலகுவில் மாற்ற முடியாதவை.

அவை பலவீனங்கள், குறைபாடுகள் எனின் மாற்ற முடியாத அல்லது இலகுவில் மாற்ற முடியாத பலவீனங்களை நாம் கொண்டுள்ளோம் என்பதை ஏற்க வேண்டுமா?

அல்லது எமது வாழ்வொழுங்கை எமது நில, சமூக யதார்த்தத்திற்கு ஏற்ப கட்டமைக்க முடியாமைதான் எமது தவறா?

நாம் பின்பற்றும் வாழ்க்கை வழி இஸ்லாம்.

அது இரு பகுதிகளைக் கொண்டது. ஒன்று நேரடி அல் குர்ஆன், ஹதீஸ் வசனங்கள். அவற்றை நாம் முழுமையாக ஏற்கக் கடமைப் படுகிறோம்.

அத்தோடு இன்னொரு பகுதி அல் குர்ஆன், ஹதீஸ் ஆகிவைக்குக் கொடுக்கப் பட்ட விளக்கங்கள்.

இவை மனிதனின் விளக்கங்கள். எனவே அவற்றை அப்படியே நாம் முழுமையாக ஏற்க வேண்டியதில்லை. அவற்றில் மனித குறைபாடுகள் இருக்கும். குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலின் படிவுகளுமிருக்கும்.

ஷாபியீ மத்ஹபுக்கேற்ப எமது பல்வேறு நடத்தைகளை ஒழுங்கு படுத்துகிறோம். அஷ்அரி சிந்தனைக் கேற்ப எம்மையறியாமலேயே நம்பிக்கைப் பகுதியை ஒழுங்கு படுத்தியுள்ளோம்.

ஷாபியீ சிந்தனையின் செல்வாக்கு எமது சிந்தனை, உணர்வுகளில் படிந்துள்ளது. இவை அனைத்தாலும், வெளித் தாக்கங்களாலும் உருவான சடங்கு, சம்பிரதாயம், நடத்தைகள் எல்லாம் எம்மில் உள்ளன.

பல்வேறு இயக்க சிந்தனைகளும் எம்முள்ளே எழுந்தன.

இவை அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து உதறி வீச வேண்டியவற்றை நாம் வீச வேண்டும்.

எமக்கென ஒரு வாழ்வுக் கட்டமைப்பை உருவாக்க்க வேண்டும். அவ்வாறு உருவாக்காமையே எமது பலவீனம் எனக் கருதலாமா?

19ம் நூற்றாண்டின் இறுதிகாலப்பிரிவுகளில் சித்திலெப்பையும், அவரைச் சேர்ந்தோரும் அப்படி ஒரு ஓட்டத்தைத் துவங்கி வைத்தார்கள். அது தொடரவில்லை. வேறு திசையில் போய்விட்டது எனக் கூறலாமா?

இக்கருத்துக்கள் நாம் பிரதானமாக சிந்திக்க வேண்டியவை!

Reply