அறியாமை ஆக்கும் கலை.

-கலாநிதி  அப்துர் ரஸ்ஸாக் பனீஹானி-

நான் பட்டதாரி மாணவனாக இருந்த போது எனது வரலாற்றுத் துறை ஆசிரியர் ஜோன் சொய்னியிடம் ஒரு கருத்தைக் கேட்டிருந்தேன். அப்போது என்னால் அதனை உள்வாங்க முடியவில்லை. நம்பவும் முடியவில்லை. அது “அறியாமை” என்ற கலையாகும். வரலாற்றில் ஒரு துறையான மனோ தத்துவ வரலாறு (Psycho – history) என்பது பற்றியும் அவர் சொல்வார். இது 1976 இல் நடந்ததாகும். பௌதீகவியல் போன்று பல்வகை கலைகளை ஒத்த “அறியாமை, அறியாமை ஆக்கும் கலை” என்றொரு அறிவியல் இருக்குமா என்று அடிக்கடி என்னையே நான் கேட்டுக் கொள்வேன்.

அறியாமையை வடிவமைத்து, உருவாக்கி, மிகச் சிறந்த தோற்றத்தில் அதனை “பெக்” பண்ணி விரிந்த அளவில் சந்தைப்படுத்தும் வல்லரசுகள் சார் நிறுவனங்கள் உள்ளன; அத்தகைய நிறுவனங்கள் உள்ள நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று என Rand ஆய்வு நிறுவனத்தில் பணி புரியும் அமெரிக்க நண்பனொருவன் எனக்கு சொல்லும் வரை “அறிவு எவ்வாறு அறியாமையை ஆக்க முடியும்? என்ற சந்தேகக் கேள்வியுடனேயே நானிருந்து வந்தேன்.

எனது நண்பனின் கருத்துப்படி “அறியாமை” என்ற சரக்கை நுகர்வோர் யார்?

அவர்கள் அனைத்து சமூகங்களிலும் மூன்று பிரிவினர் என்று அவர் கூறினார்.

(1) சமூகத்தின் ஏழைகள் : அவர்கள் ஒரு பெரும் தொகையினர் சமூக, மார்க்கச் சிறுபான்மையினர்களாவர். மற்றும் நகர சபைத் தொழிளார்கள், தூரப் பிரதேசங்களில் வாழும் ஏழைகள், கிராமப் புரங்களில் வாழும் ஏழைகள். தோட்டங்களில் தொழில்புரிவோர். போன்றோரும் இதில் அடங்குவோர்.

பாடசாலை ஆசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் என்போரும்  இந்த சபிக்கப்பட்ட “சரக்கை” நுகர்வோரில் இலக்காகக் கொள்ளப்பட்டோர் என அவர் சொன்னமைதான்  எனக்கு மிகுந்த விசனத்தைத் தந்தது. ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் அதன் சனத் தொகையில் 90% மானோராக இப்பிரிவினர் உள்ளனர். அமெரிக்கப் படை வீரர்களும் இதில் அடங்குவார்கள்.

(2) விதியை நம்பிக்கை கொள்ளும் மார்க்க பக்தர்கள். இவர்கள் விதி ஒரு போதும் மாறப் போவதில்லை. என்ற நம்பிக்கை காரணமாக அதற்கு முற்றிலும் பணிந்து போனவர்கள். மார்க்கப் போக்கு கொண்ட பெருந்தொகை மக்களை அறியாமையில் வீழ்த்தும் செயலுக்கு இவர்களே பொறுப்பாவர்.

(3) அரசுகளில் பணிபுரியும் குறிப்பாக வறுமைப்பட்ட நாடுகளின் அரசுகளில் பணிபுரியும் நுணுக்கமற்ற ஏமாளிகளும் இப் பிரிவில் சேர்வர். குறிப்பாக இவர்கள் தங்களது நாடுகளில் தீர்மாணங்களை எடுப்போருக்கு ஆலோசனைகளை வழங்கும் பல்வேறு துறைசார் நிபுணர்களாவர். இவ்வாறு இவர்கள் அறியாமையை நகர்த்துதல், அதனை நியாயப்படுத்தலுக்கு பயிற்றுவிக்கப்படுவார்கள். கோட்பாடு, அறிவு, சாத்தியப்பாடுகள், வளங்கள் என்ற பெயர்களின் ஊடே இதனை அவர்கள் செய்வர். அரசியல், பொருளாதாரப் பகுதி சார்ந்தோரே இதில் முதன்மையானவர்களாவர். சீர்திருத்தத்தின் சாத்தியப்பாட்டில் தீர்மாணங்களுக்கு பொறுப்பானோரை நம்பிக்கை இழக்கச் செய்தலே இவர்களது பணியாக இருக்கும். பொது மக்களுக்கு மத்தியில் பொய்களைத் தொடர்ந்து பரப்பி அவை உண்மையே என நினைத்து அதற்காக வாதாடிப் பாதுகாக்கும் நிலைக்கும் அவர்களைக் கொண்டு வந்து விடுவர்.

எனது நண்பன் எனக்குக் கூறியவற்றில் ஒன்று – அதுவே மிக அபாயகரமானது. சகோதரர்களுக்கு மத்தியில் எதிர்ப்புணர்வை தோற்றுவந்தலும் அறியாமை ஆக்கம், அதனை சந்தைப்படுத்தலில் அடங்குவதாகும். 1906ம் ஆண்டிலிருந்து அறியாமையை ஆக்குவோர் இதனைச் செய்ய முயற்சித்து வந்தனர். இக்கலையின் வளர்ச்சி அக் கலைப்பிரிவுக்கு உரியதா என நான் வினவினேன். ஆம் என்று பதில் சொன்ன நண்பன் விவரித்தான் :

Henry Campbell Benner man மகா நாட்டிலிருந்து இது துவங்கியது. அம்மகா நாடு லண்டனில் ஒரு மாத காலம் தொடந்து நடந்தது. உஸ்மானிய அரசின் வீழ்ச்சிக்கு சற்று முன்னர் அரபுப் பிராந்தியம் சம்மந்தப்பட்ட அரசியல் ஒழுங்குகள் வரையப்பட்டன. உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் கீழ் வாழ்ந்த அரபு பிரஜை அந்த மாநாட்டு அரசியல்வாதிகள் வரைந்து விட்டு எல்லைகளின் காரணமாக சில மீட்டர்கள் தூரத்தில் இருப்பினும் விசா பெற்று நுழைய வேண்டிய நிலை ஏற்பட்டமை அந்த அரசியல் ஒழுங்குகளில் ஒன்றாகும். ஹால்டின் என்ற ஒரு பிரிட்டன் மந்திரி :

ஜோர்டான் (ஷாம்) யுத்த முனைக்கான நாடு என நபியவர்கள் கூறியதைப் பரிகசித்து நான் அந்த ஜோர்டானை பல மக்கள் பிரிவுகளும் போராடிக் கொள்ளும் நிலமாக்குவேன் என்றார்.

எனது அமெரிக்க நண்பன் சொன்தைக் கேட்டு நான் குழம்பித் தடுமாறிப் போனேன். எனது எளிய தகவல் சேகரிப்புப் பகுதிக்கு அவன் தந்த தகவல்களும் சிந்தனைகளும் உண்மைக்கும், கற்பனைக்கும் இடையே என்னை ஆட்டங்காண வைத்தது.

பல நாடுகளில் தேசிய அரசு நிர்வாகம் குறித்து நான் அதிகம் வாசிக்கிறேன். குறிப்பிட்ட அந்த நாடுகளில் நிலவும் நிலைமைகள் ஆழ்ந்து பார்க்கும் போது அந்த அறிவுக் கலையின் உண்மையை, அது ஆக்கப்படுகின்றமை, அதன் அழிவு தரும் விளைவுகளை என்னால் மறுக்க முடியவில்லை. அறிவுள்ளோரே படிப்பினை பெறுங்கள் அறியமையையும், அறியாமை உருவாக்கலும் நாசமடையட்டும்.

Reply