இஸ்லாம் பற்றிய அச்ச உணர்வு பரவியிருந்த போதிலும் கூட

– கலாநிதி – முஹம்மத் இமாரா

மதச்சார்பின்மை ஐரோப்பாவின் கிறிஸ்தவ மார்க்கத்தை ஒடுங்கச் செய்து விட்டது. வெறுமை அறிவியல் ரீதியாகச் சாத்தியமில்லை. எனவே ஏனைய  மார்க்கங்கள் குறிப்பாக இஸ்லாம் ஐரோப்பாவின் மார்க்கமற்ற இடைவெளியை நிரப்பி வருகிறது. ஐரோப்பா இஸ்லாமிய மயமாகிறது என்று எச்சரிக்கை விடுத்து வலதுசாரி கட்சிகளும், அமைப்புகளும் பல ஆர்ப்பாட்டங்களை நடத்திய போதிலும் நிலைமை இவ்வாறே உள்ளது.

2001 செப்டம்பர் 11 நிகழ்ச்சியின் பின்னர் இஸ்லாத்தின் நோக்கும் வீதமும், இஸ்லாத்தில் நுழைவோர் வீதமும் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் வருடாந்தம் இஸ்லாத்தில் நுழைவோர் தொகை 20,000த்திற்கும் மேலாக இருக்க ஐரோப்பாவில் அது 23,000 த்தையும் தாண்டியுள்ளது.

இங்கிலாந்தில் 2011 முஸ்லிம் சனத்தொகை 2,700,000 ஆகும். 2021 இல் அது 4,000,000 ஆகவும் 2031 இல் 8,000,000 ஆகவும் இன்றையிலிருந்து 30 வருடங்களில் அது சிலவேளை 15,000,000 ஆகவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறே லண்டனில் இன்னும் 50 வருடங்களில் கிறிஸ்தவ தேவாலயங்களின் மணியோசை கேட்காமலே போகலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏனெனில் 2001 7,000,000 ஆக இருந்த இங்கிலாந்தின் நாஸ்திகர்களது எண்ணிக்கை 14,000,000 ஆக 2011 ல் அதிகரித்துள்ளது. அவர்கள் லண்டன் சனத்தொகையில் மட்டும் 48%ஆக உள்ளனர். 2041ல் அவர்களது சனத்தொகை 77,000,000 ஆக முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடும்பங்களின் உடைவு, பௌதீக வாழ்வு மீதான பற்று, மதச்சார்பின்மையின் விளைவான மனோ இச்சைகளின் ஆதிக்கம் என்பவற்றால் முஹம்மத் என்ற பெயர் ஜோர்ஜ் என்ற பெயரை விட 2006 பிறந்த பிள்ளைகள் மீது அதிகரித்துள்ளது. 2009 இல் ஜெக், ஹெரி என்ற பெயர்களைவிட அப் பெயர் முதன்மை ஸ்தானத்தைப் பெற்றுள்ளது. 2009 இல் இங்கிலாந்தில் பிறந்த 706,248 பிள்ளைகளில் 7549 பேருக்கே அப் பெயர்கள் சூட்டப்பட்டன. ஆனால் 2004 – 2008 ஆண்டுகளுக்கிடையிலான 4 வருடங்களில் முஸ்லிம்களின் தொகை அரை மில்லியனாக அதிகரிக்க அதே காலப் பிரிவில் கிறிஸ்தவர்கள் தொகை 2 மில்லியனால் குறைந்துள்ளது.

முஸ்லிம்களில் சிறுவயதைக் கொண்ட சமூகப் பிரிவினர் பெருந்தொகையாக இருக்க கிறிஸ்தவர்களில் 70 வயதிற்கு மேற்பட்டோரே பெருந்தொகையாக உள்ளனர்.

குடும்ப உடைவால், தன்னினச் சேர்க்கையிலும் வெள்ளையர் சமூகத்தின் உலக சனத் தொகை 1915ல் 28% இருந்து 2015இல் 18% மாக ஆகியுள்ளது.

பிரான்சில் முஸ்லிம்களது சனத்தொகை அரச கணிபீட்டின் படி 6,000,000 ஆகும். இஸ்லாமிய நிறுவனங்களின் கணிப்பீட்டின் படி அது 8,000,000 ஆகும். அங்கு 1080 பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு வருடமும் அங்கு 3,600 பிரான்ஸியர் இஸ்லாத்தைத் தழுவுகின்றனர்.

ரஷ்யாவில் 1991 கம்யூனிஸ வீழ்ச்சியின் பின் இருந்த பள்ளிகளின் தொகை 98 மட்டுமே. 2008 இல் அதன் தொகை 7,200 ஆகும். அங்குள்ள முஸ்லிம் சனத்தொகை 23,000,000 ஆகும். அதாவது ரஷ்யாவில் 5 பேர்களில் ஒருவர் முஸ்லிம் ஆகும். 2050 ஆண்டாகும் போது ரஷ்யாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெல்ஜியத்தில் முஸ்லிம் சனத்தொகை 25% மாகும். பிறக்கும் குழந்தைகள் தொகையில் அவர்களின் வீதம் 50 ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைநகரான புரூக்ஸெல்ஸில் 20 ஆண்டுகளின் பின்னர் முஸ்லிம்கள் பெரும்பாண்மையாவர்.2001 இலிருந்து முஹம்மத் என்ற பெயரே அங்கு மிகப் பரவலாக உள்ளது. ஐரோப்பா முழுமையிலும் முஸ்லிம் சனத்தொகை 52,000,000 இது 20 வருடங்களில் 104 மில்லியன்களாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதச்சார்பின்மை ஐரோப்பாவில் ஏற்படுத்திய விளைவை புள்ளிவிபரங்கள் இவ்வாறு பேசுகின்றன. ஐரோப்பியர்கள் இவ்வாறு நச்சுப் பாத்திரத்தை அருந்தினர். அதே விளைவை எதிர்கொள்ள நாம் அந்த நச்சும் பாத்திரத்தைப் பருக வேண்டுமென அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மூலம்: கலாநிதி அஹ்மத் ரய்ஸூனியின் இணையத்தளம்

raissouni.ma

Reply