மாற்றமும் ரமளானும்

 

அல்குர்ஆன் இறங்கிய அந்த நாளின் இரவில் இந்த நாட்டின் நகரங்கள், கிராமங்கள் தோறும் மலக்குகள் வலம் வரப் போகிறார்கள்.

புனிதமும், அருளும் அமைதியும் நிறைந்த அந்த இரவு நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை இதற்காகத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

அதற்கு:

  1. மனக்கட்டுபாட்டை மிகவும் பேணி, பாவச்செயல்களிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் நோன்பு அவசியம்.
  2. உயிரோட்டமிக்க வணக்க வழிபாடுகள் அவசியம்.

அல்லாஹ் வெளித் தோற்றத்தைப் பார்ப்பதில்லை. உள்ளங்களையே பார்க்கிறான் என்று நாம் ஆழமாக உணர வேண்டும்.

உள்ளங்களில் தோன்றும் மாற்றமே சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டுவரும்.

மனிதர்களாகத் தமது மன நிலைகளை மாற்றிக் கொள்ளாத வரையில் அல்லாஹ்வும் சமூக நிலைகளை மாற்றுவதில்லை.

மன நிலைகளை மாற்றும் காலம் இந்த நோன்பு காலம்.

அங்கு மாற்றங்கள் தோன்றுமா?

அப்போது சமூகத்திலும் மாற்றங்கள் தோன்றுமா?

எம் உள்ளேயுள்ள சிக்கல்  மிக்க பிரச்சினைகளுக்கு தீர்வு தேடித்தரும் மாதம் இது.

அப்படி அம் மாதத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் நிலை எம்மிடம் உள்ளதா?

Reply