நோன்பு என்ற புனித மாதத்தின் ஆன்மீக வாழ்த்துக்கள்

சகோதரர்கள் எல்லோருக்கும் ரமளான் என்ற நோன்பு மாத ஆன்மீக வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

முஸ்லிம் சமூகம் நோன்பை வரவேற்கிறது. கஷ்டங்களையும், துன்பங்களையும், துயரங்களையும்  சுமந்து நிற்கிறது.

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் தமது இயல்பு வாழ்க்கைக்கு பூரணமாகத் திரும்பவில்லை. நோன்பு அவர்களுக்கு ஒரு ஆறுதலாக அமைந்து மனப்பலத்தையும் தரும் என எதிர்பார்ப்போம்.

குறைந்த வசதிகளோடும், பிரச்சினைகளோடும் நோன்பு நோற்கும் போது அது தனிச் சுவை பெற்றதாக அமையும்.

நோன்பை பலவீனப்படுத்தும் சில வேளை அழித்து விடும் புறம்பான செயற்பாடுகளின்றியே நோன்பு நோற்பது இந்நிலையில் இலகுவானதாகும்.

சர்வதேச முஸ்லிம் சமூகம்  சுமக்கும் துன்பங்களும், துயரங்களுமோ மிகப்பாரியது. அது ஒரு தொடர் போராட்டத்திலிருக்கிறது.

நாம் எமது வரலாற்று ஓட்டத்தில் ஒரு வித்தியாசமான காலப்பிரிவுக்கு வந்து சேர்ந்தோம்.

உலகமே தொழில் நுட்ப மயமான காலம்.

மதச் சார்பின்மையின் அடிப்படையிலமைந்த காலம்.

ஆய்வுகளும், மிகப் பாரிய திட்டமிடல்களும் சமூகங்களை நகர்த்தும் காலம்.

உலகளாவிய பொருளாதாரம் கட்டமைந்து சமூகங்களையும், நாடுகளையும் ஆளும் காலம்.

இந்த உலகத்தை எதிர் கொள்ள கண்டிப்பாக வித்தியாசமான அணுகு முறைகள் தேவை

எம்மை நாம் – அதாவது எமது மார்க்கத்தை மீள் ஒழுங்கு படுத்தலுக்கு – தஜ்தீத் உட்படுத்த வேண்டிய காலம்.

ஆனால் நாம் பாரம்பரிய அறிவை அப்படியே சுமக்க முனைகிறோம்.

அதனை சுமந்து முற்றிலும் புதிய இந்த உலகத்தினுள் செல்லும் போது தடுமாறுகிறோம், விழுகிறோம், பல பயங்கரத் தவறுகளை விட்டு அழிவைத் தேடிக் கொள்கிறோம்.
இந்த ரமளான் மாதம் ஆன்மீகப் பக்குவத்திற்கான மாதம். அந்த மனநிலையோடு அது ஒரு சிந்தனை மீட்டலுக்கும் எம்மை இட்டுச் செல்லாதா…..?

நோன்பு கால இறையருள் கிடைக்குமாக.
புனிதர்களாக மாற அல்லாஹ் எமக்கு அருள் பாலிப்பானாக.

Reply